உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்? Old Courtallam | Minister Mathivendan | Forest department

வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்? Old Courtallam | Minister Mathivendan | Forest department

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாணவன் இறந்தான். அதைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அருவியல் குளிக்க காலை 6 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றாலம் செல்லும் ரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க வனத்துறை செக் போஸ்ட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. இந்த சூழலில் 2 நாட்களுக்கு முன் தமிழக வன அமைச்சர் மதிவேந்தன் பழைய குற்றாலம் அருவியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சரின் வருகையை தொடர்ந்து பழைய குற்றாலம் அருவி முழுதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 29ம் தேதி முதல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை