உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு | puundi matha kovil festival

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு | puundi matha kovil festival

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமையான பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பசிலிகா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி உள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னையின் பிறப்பு பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவின் துவக்கமாக மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலின் முன் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க... என கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தென் மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னையை வழிபடுவர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !