950 கிராம் மெத்த பெட்டமின் சிக்கியது Rupees 2 crore drugs seized
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கீழத் தோட்டம் கடற்கரையில் மர்ம பார்சல் கிடைப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும போலீசார் மர்ம பார்சலை கைப்பற்றினர். அதில் 950 கிராம் மெத்த பெட்டமின் என்ற போதைப் பொருள் இருந்தது. அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
அக் 26, 2024