/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ சக்கரவாகேஸ்வரர் கோயில் பொம்மை பூ போடும் நிகழ்வு கோலாகலம் | Aanmeegam | Temple festival | Thanjavur
சக்கரவாகேஸ்வரர் கோயில் பொம்மை பூ போடும் நிகழ்வு கோலாகலம் | Aanmeegam | Temple festival | Thanjavur
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் தேவநாயகி அம்மன் சமேத சக்கரவாகேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சப்தஸ்தான விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் துவங்கியது. அலங்கரித்த கண்ணாடி பல்லக்கில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். 7 ஊர் வழியாக வலம் வந்து அய்யம்பேட்டை அழகு நாச்சியம்மன் கோயிலை அடைந்தனர். அங்கு சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடந்தது. சுவாமி சக்கரவாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டார். 18 கிராம மக்கள் பங்கேற்றனர்.
மார் 29, 2024