/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ கர்நாடக இசை கலைஞர்கள் இசையஞ்சலி| Thyagaraja swamygal keerthanai | Thiruvaiyaru
கர்நாடக இசை கலைஞர்கள் இசையஞ்சலி| Thyagaraja swamygal keerthanai | Thiruvaiyaru
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் திருவையாறில் 1847ம் ஆண்டு முக்தி அடைந்தார். ராம பக்தரான இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் பிரசித்தி பெற்றவை தியாகராஜரை நினைவு கூறும் வகையில் திருவையாறு ஸ்ரீ தியாகபிரம்ம சபா சார்பில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறும் திருவையாறு சகோதரர்கள் வெங்கடேசன், நரசிம்மன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் இசையஞ்சலி செலுத்தப்பட்டது இசை கலைஞர்கள் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ உள்ளிட்ட ராகங்களில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர் தியாகராஜர் படத்திற்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது ஏராளமான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
ஜன 26, 2025