30 ஓட்டு பெற்று வெற்றி | nellai Mayor election DMK kittu win
நெல்லை மேயராக இருந்த சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இச்சூழலில், கடந்த மாதம் மேயர் பதவியை சரவணன் ராஜினாமா செய்தார். புதிய மேயர் வேட்பாளராக, திமுகவின் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவர், 25வது வார்டில் 3 முறை வெற்றி பெற்றவர். அவரை எதிரத்து, கவுன்சிலர் பவுல்ராஜ், போட்டியிட்டார். இவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். திருநெல்வேலி மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் அதிமுகவின் ஜெகநாதன் மட்டும் ஓட்டு போட வரவில்லை. பதிவான 54 ஓட்டுகளில், திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 ஓட்டுகள் பெற்று மேயராக வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற பவுல்ராஜ் 23 ஓட்டுகள் பெற்றார். 1 ஓட்டு சீட்டில் டிக் எதுவும் இல்லாததால் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் கிட்டுவுக்கு கமிஷனர் சுகபுத்திரா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.