உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / பீதியில் ஊரை காலி செய்த 200 வட மாநில தொழிலாளர்கள் | Tamaripakkam | mysterious fever

பீதியில் ஊரை காலி செய்த 200 வட மாநில தொழிலாளர்கள் | Tamaripakkam | mysterious fever

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் மேலக்கொண்டையூரில் திமுக பிரமுகர் ஸ்ரீதருக்கு சொந்தமான செங்கல் சேம்பரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தனர். கடந்த 3 நாட்களாக சிலருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மர்ம காய்ச்சல் தாக்கி 2 நாட்களுக்கு முன்பு 4 மாத பெண் குழந்தை இறந்தது. தொடர்ந்து ராமகிருஷ்ணா தியாகு வயது 65 மற்றும் அலந்தர் சந்தா வயது 52 ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் பணியில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் அச்சத்தில் ஒடிசாவுக்கு ஓட்டம் பிடித்தனர். வெள்ளியூர் மற்றும் புலியூர் அரசு ஹாஸ்பிடல் டாக்டர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செங்கல் சேம்பரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தனர். அங்கிருந்த சில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். சேம்பரில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். வேலை செய்தவர்கள் சமையல் செய்து சாப்பிட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆனாதால் உயிரிழிப்பு ஏற்பட்டதாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தெரிவித்தனர். திமுக பிரமுகர் ஸ்ரீதருக்கு ஆதரவாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் செயல்பட்டு மூவர் பலியை மூடி மறைப்பதாக வட மாநில தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினர். இறப்பு காரணம் குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை