உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| District Marathon| Cash Prize| Sports | Tiruvarur

நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| District Marathon| Cash Prize| Sports | Tiruvarur

நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| District Marathon| Cash Prize| Sports | Tiruvarur திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 17 மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி, தெற்கு , கிழக்கு உள்ளிட்ட 4 முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகில் போட்டித் தடம் முடிவுற்றது. நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா மற்றும் நகர்மன்ற துணைத் தலைவர் அகிலா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3000 ரூபாய் , மூன்றாம் பரிசு 2000 ரூபாய் மற்றும் அடுத்த 10 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை