திருவாரூர் கலெக்டர் அதிரடி | bribes issue Thasildar suspend
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் காரல் மார்க்ஸ். அப்பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரிடம் இடப் பிரச்சினையை தீர்க்க 30,000 லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வலைதளங்களில் வைரலானது. வீடியோவில் ராமதாஸ் 500 ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டு ஏற்கனவே 20 ஆயிரம் கொடுத்துள்ளேன். தற்போது 30 ஆயிரம் கொடுக்கிறேன் என கூறினார். ராமதாசிடம் தாசில்தார் ரூபாயை பெற்றுக் கொள்கிறார். இந்த வீடியோவை பார்த்த திருவாரூர் கலெக்டர் சாரு ஸ்ரீ விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் காரல் மார்க்ஸ் லஞ்சம் வாங்கியது உறுதியானது. மேலும் தாசில்தார் காரல்மார்க்ஸ் அப்பகுதியில் குளம் குட்டைகளில் மண் எடுக்க மண் கடத்தல் மாபியா கும்பலிடம் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் காரல்மார்க்ஸை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். பொறுப்பு தாசில்தாராக ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜாராமன் நியமிக்கப்பட்டார்.