/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ பள்ளி வாளகத்திற்குள் பீதியில் மாணவர்கள் Tirupattur Attack the leopard Wounded watchman
பள்ளி வாளகத்திற்குள் பீதியில் மாணவர்கள் Tirupattur Attack the leopard Wounded watchman
திருப்பத்தூர் சாமநகரில் ஒரு வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. வனத்துறையினர் சிறுத்தையை தேடிய போது சிறுத்தை அருகேயுள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்திற்குள் தாவியது. அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையில் தாக்கி விட்டு தப்பியது. வனத்துறையினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். ஒய்எம்சி, சிஎஸ்ஐ, தோனி சாவியோ உள்ளிட்ட பள்ளிகள் உள்ளதால் மாணவர்களை வெளியே விடாமல் பள்ளியிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜூன் 14, 2024