ப்ளஸ் 2 படித்து கிளினிக் நடத்திய டுபாக்கூர் டாக்டர் | fake doctor arrested | tirupathur
ப்ளஸ் 2 படித்து கிளினிக் நடத்திய டுபாக்கூர் டாக்டர் / fake doctor arrested / tirupathur திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கவுண்டனுார் பச்சூர் பகுதியில் எம்பிபிஎஸ் படிக்காத ஒருவர் கிளினிக் நடத்தி ஒரிஜினல் டாக்டர் போல் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து அரசு டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பச்சூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 55 என்பவர் அப்பகுதியில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பது உறுதியானது. விசாரணையில் அவர் ப்ளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அளித்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரது போலி கிளினிக் சீல் வைக்கப்பட்டது. 5000 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கைப்பற்றப்பட்டன. கைராசி டாக்டர் என பெயரெடுத்த ராமச்சந்திரன் போலி டாக்டர் என தெரியவந்ததால் அவரிடம் பல ஆண்டுகளாக ட்ரீட்மென்ட் எடுத்து வந்த நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.