அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நொய்யல் ஆற்றில் அணை கட்டும் போது அணை உடையாமல் இருக்க நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்தார். அணைக்காக உயிர் தியாகம் செய்த நல்லம்மான் என்ற அந்த சிறுமியை குலதெய்வமாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவில் மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆக 06, 2024