அப்துல் கலாம் நினைவு சுழற்க் கோப்பை நிப்ட் டீ பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்
அப்துல் கலாம் நினைவு சுழற்க் கோப்பை நிப்ட் டீ பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் / Cricket Macth / Tirupur அப்துல் கலாம் நினைவு சுழற்க் கோப்பைக்கான நிப்ட் டீ பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் டீ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிப்ட் டீ கல்லுாரியுடன், தினமலர் நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட் இணைந்து நடத்தும் இந்த போட்டியில், பின்னலாடை நிறுவனங்களின் 20 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 9 ம் தேதி துவங்கிய 15 ஓவர் கொண்ட லீக் சுற்று போட்டிகள், இம்மாதம் 5 ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் போட்டிகளில் வெற்றிபெற்று, எட்டு அணிகள் காலியுறுதிக்கு முன்னேறின. 20 ஓவர் கொண்ட காலியுறுதி போட்டிகள், நிப்ட் டீ மைதானத்தில் துவங்கியது. காலை மற்றும் மதியம் நடத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் நான்கு அணிகள் மோதின. முதல் போட்டியில் எஸ்.டி., வாரியர்ஸ் - ஈஸ்ட்மேன் குளோபல் கிளாத்திங் நிறுவன அணிகள் மோதின. டாஸ் வென்ற எஸ்.டி., வாரியர்ஸ், ஈஸ்ட்மேனை பேட்டிங்கிற்கு அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன், பத்து விக்கெட் இழப்பில் 118 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்.டி., வாரியர்ஸ் பத்து விக்கெட் இழப்பில் 53 ரன்னில் அட்டமிழந்தது. 65 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஈஸ்ட் மேன் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங்கில் 21 பந்துக்கு 31 ரன் எடுத்தார். பவுலிங்கிலும் மூன்று ஓவர் பந்து வீசி 8 ரன் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்த ஈஸ்ட்மேன் வீரர் அஜித்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மற்றொரு காலிறுதியில் சி.ஆர். கார்மென்ட்ஸ் டைகர் - குவாலியன்ஸ் இன்டர் நேஷனல் அணிகள் மோதியது. முதலாவது பேட்டிங் செய்த சி. ஆர்., கார்மென்ட்ஸ் பத்து விக்கெட் இழப்பில் 75 ரன் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த குவாலியன்ஸ் 3 விக்கெட் இழப்பில் 78 ரன் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் 21 பந்துக்கு 38 ரன் எடுத்ததோடு பவுலிங்கில் மூன்று விக்கெட் வீழ்த்திய குவாலியன்ஸ் வீரர் சுனில்குமாருக்கு ஆட்டநாயகன் விருத வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை காரணமாக வரும் 19 ம் தேதி போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி நடைபெறும் இரண்டாவது நாள் காலிறுதி போட்டியில் விக்டஸ் டையிங் - ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் - டெக்னோ ஸ்போர்ட் அணிகள் மோதுகின்றன. வரும் நவம்பரில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும்.