மொபைலில் பேசிஒப்புதல் பெற்ற தந்த அமைச்சர்சுப்பிரமணியன் |Minister Subramanian |GH inspection |Tripur
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில்47.56 கோடி மதிப்பில் 86 படுக்கைகளுடன் புதிதாக அரசு மருத்துவமனை ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்க உள்ளார். இதன் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சரிடம் எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அதிகாரிகள் உள்ளிட்டோர் திருப்பூரில் கூட்டம் அதிகம்; படுக்கை எண்ணிக்கையை கூடுதலாக்கி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். உடனே சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தியை மொபைலில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் 14 கூடுதல் படுக்கை வசதியை பெற்று தந்தார்.