உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / இளம் வீராங்கனைகள் ஆபாரம் | Ko Ko tournament | thirupur

இளம் வீராங்கனைகள் ஆபாரம் | Ko Ko tournament | thirupur

இளம் வீராங்கனைகள் ஆபாரம் / Ko Ko tournament / thirupur திருப்பூர் வடக்கு குறுமைய மாணவிகள் கோக்கோ போட்டி நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுதாமோகன், மாவட்ட உடற்கல்வி அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். போட்டிகளை வாவிபாளையம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிரின்ஸ், இணைச் செயலாளர் இளங்கோவன் மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 14 அணியினர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் அனுப்பர்பாளையம் அரசு பள்ளி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அணியும் விளையாடியது. டை பிரேக் முறையில் அனுப்பர்பாளையம் அணி 1-0 புள்ளிக் கணக்கில் வென்றது. தொடர்ந்து 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் இறுதிப்போட்டி நடக்கிறது. நடுவர்களாக ஜெரால்ட், ராஜா செயல்பட்டனர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி