உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பொங்கலையொட்டி மாடுகள் விற்பனை ₹1.50 கோடி | Tirupur | Mattu Pongal Business

பொங்கலையொட்டி மாடுகள் விற்பனை ₹1.50 கோடி | Tirupur | Mattu Pongal Business

பொங்கலையொட்டி திருப்பூர் அமராவதிபாளையத்தில் கால்நடைச்சந்தை களைகட்டியது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மாடு, எருமை, கன்றுகள் கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க 2,000 ஆயிரத்துக்கும் அதிகமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்ததால் மாட்டுச்சந்தை களைகட்டியது. நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல் என்பதால் மாடுகளுக்கு தேவையான கயிறு, அலங்கார பொருட்கள், மணிகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மாடுகள் கழுத்தில் கட்டும் தல கயிறு, தும்பு கயிறு, கம்பளி கயிறு விற்பனை அமோகமாக நடைபெற்றது. 10 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை கயிறுகள் விற்பனை நடைபெற்றது. சந்தைக்கு 785 கால்நடைகள் வரத்து இருந்தது. கன்றுகுட்டி அதிகபட்சமாக 5,000 ரூபாய்க்கு விற்பனையானது. காளை 34 முதல் 39 ஆயிரம், எருமை 26 ஆயிரம் முதல் 31 ஆயிரம், பசுமாடு 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கேரளாவில் இருந்து மாடுகளை வாங்க அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரே நாளில் 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !