உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிழக்கு லயன்ஸ் சங்கம் ஏற்பாடு | Sports | Covai

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிழக்கு லயன்ஸ் சங்கம் ஏற்பாடு | Sports | Covai

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிழக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் ஆண்டு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிக்கு திருப்பூர் மாவட்ட தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். போட்டியை கல்லுாரி முதல்வர் கல்யாணி துவக்கி வைத்தார். இதில் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள், கிழக்கு லயன்ஸ் சங்கம், அரசு கல்லுாரி தட கள சங்கம், சிஸ்கா இளைஞர் சமூக அறக்கட்டளை, மை இன்டியா மை ஸ்கூல் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை