வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 1 லட்சம் தேங்காய் | Parambikulam Aliyar Project Canal Broken
உடைந்தது PAP கால்வாய் PWD அலட்சியம் பிஏபி பிரதான கால்வாய் உடைந்தது கிராமங்களில் புகுந்தது வெள்ளம் 2000 கன அடி நீர் வயல்களில் பாய்ந்து வீணானது கால்வாயை PWD பராமரிக்க தவறியதால் வந்தது விணை ஒரு லட்சம் தேங்காய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல் தரமற்ற கால்வாய் அமைத்த கான்ட்ராக்டர், PWD அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலூகா வாலிபாளையம் ஊராட்சி வழியாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் செல்கிறது. சமீபத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்காக கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை 8 மணி அளவில் பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஊருக்குள் புகுந்தது. தென்னந்தோப்புகளில் உரித்து வைத்திருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளை நிலங்களில் வெள்ளம் தெப்பம் போல் தேங்கியது. இதனால் வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளம் வடிய வழியில்லாதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.