உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் ஏற்பாடு | sports | covai

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் ஏற்பாடு | sports | covai

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஆறாவது மாவட்ட ஜூனியர் தடகள போட்டி அணைப்புதுார் டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் 14, 16, 18 மற்றும் 20 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியை டீ பப்ளிக் பள்ளி சேர்மன் ஈஸ்ட்மேன் சந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட தடகள சங்க செயலாளர் சண்கமுகசுந்தரம் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். எம்.பி., சுப்பராயன் தேசியக்கொடி ஏற்றினார். மேயர் தினேஷ்குமார் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் ஒலிம்பிக் கொடியை ஏற்றினர். இதில் 1,560 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 60 மீட்டர் முதல் 5000 மீட்டர் வரை ஓட்டப் போட்டிகள். 400 மீ, 1600 மீ, 4000 மீ தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. தடகள சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை