உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்பாடு | sports | Tripur

பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்பாடு | sports | Tripur

திருப்பூர் தெற்கு குறுமைய விளையாட்டுப் போட்டிகளை பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி பொறுப்பேற்று நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர் அனைத்துப் பிரிவினருக்கான எறிபந்துப் போட்டிகள் கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 6 அணிகள், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3 அணிகள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5 அணிகள் பங்கேற்றன. போட்டியை கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் சேர்மன் மோகன் கார்த்திக் துவக்கி வைத்தார். நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் விதிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் மணிவண்ணன் விளக்கினர். 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவின் முதல் போட்டியில் விகாஸ் வித்யாலயா பள்ளி அணி 2 க்கு 0 என்ற செட் கணக்கில் கதிரவன் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை