உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஆகஸ்ட் 28ல் பரிசளிப்பு | State Level Sub Junior Badminton ChampionShip | Tirupur

ஆகஸ்ட் 28ல் பரிசளிப்பு | State Level Sub Junior Badminton ChampionShip | Tirupur

ஆகஸ்ட் 28ல் பரிசளிப்பு / State Level Sub Junior Badminton ChampionShip / Tirupur தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டி, திருப்பூர் மோகன்ஸ் பாட்மிண்டன் அகாடமியில் வரும் 28 ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட அணி, கிளப் வீரர்கள் மற்றும் தனி நபர்கள் என, 650 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று மாணவியருக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. நாக் அவுட் முறையில் மொத்தம் 32 பேர் பங்கேற்ற முதல் சுற்று போட்டி நடந்தது, இதில் வெற்றி பெறும் 16 பேருக்கு 2 ம் சுற்று போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் எட்டு பேர் மட்டுமே காலிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். நான்கு பிரிவுகளில் நடக்கும் போட்டிகளின் அரை இறுதி போட்டி வரும் 27 ம் தேதியும், இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 28 ம் தேதியும் நடைபெறுகிறது.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை