உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / அரசுக்கு ₹பல கோடி நஷ்டம் | Gravel Soil Robbery | Panjappur |Trichy

அரசுக்கு ₹பல கோடி நஷ்டம் | Gravel Soil Robbery | Panjappur |Trichy

கிராவல், செம்மண் கொள்ளை திமுக ‛அல்லக்கை அட்டூழியம் டிஸ்க்: அரசுக்கு ₹பல கோடி நஷ்டம் / Gravel Soil Robbery / Panjappur / Trichy திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிக்காக அழுந்தூர் பெரியகுளம் ஏரியில் கிராவல் மற்றும் செம்மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மண் அள்ளும் பணியை அமைச்சர் நேருவின் ஆதரவாளரான மணப்பாறை திமுக ஒன்றிய நிர்வாகி ஒருவர் எடுத்துள்ளார். இவர் தலைமையிலான மணல் மாபியா கும்பல் அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக நுாற்றுக்கணக்கான லாரிகளில் 24 மணி நேரமும் கிராவல் மற்றும் செம்மண் கடத்துகிறது. மண் கடத்தலுக்கு கனிம வளம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் அமோக ஆதரவு அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு விளை நிலங்கள் பாழாகி வருவதாக விவசாயிகள் குமுருகின்றனர். பெரியகுளம் கண்மாயை நம்பி பாசன வசதி பெறும் 250 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மண் கடத்தல் மாபியா கும்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி