உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தேசியக்கொடி ஊர்வலம் செல்ல போலீஸ் தடை | National Flag Rally | Police protest | BJP | Tirchy

தேசியக்கொடி ஊர்வலம் செல்ல போலீஸ் தடை | National Flag Rally | Police protest | BJP | Tirchy

78ம் ஆண்டு சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் 3 நாட்கள் கொண்டாட மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பாஜக இளைஞரணி சார்பில் மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்திலிருந்து, வரகனேரியில் உள்ள தியாகி வ.வே.சு. அய்யர் வீடு வரை இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்; வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை மிரட்டல் விடுத்தது. மேஜர் சரவணன் நினைவுச் சதுக்கம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜகவினர் ஒரே இடத்தில் திரள முடியாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்தனர். அதைத் தொடர்ந்து மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து தேசியக் கொடியை ஏந்தி தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டனர். அரசு மருத்துவமனை, மதுரம் மருத்துவமனை, எம்ஜிஆர் சிலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று மீண்டும் பாஜக அலுவலகம் வந்தனர். சுதந்திர இந்தியாவில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் செல்வதை போலீசார் தடுத்த சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை