மாரியம்மன் கண்ணாடி பல்லாக்கில் வீதி உலா| Samayapuram Mariamman seer| Srirangam
தைப்பூசத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மனுக்கு கொள்ளிடகரையில் தீர்த்தவாரி நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்பது ஐதீகம் தீர்த்தவாரி உற்சவத்திற்கு வரும் மாரியம்மனை எதிர்கொண்டு ரங்கநாதன் சீர் கொடுப்பது வழக்கம் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளினார் கொள்ளிட கரையில் தீர்த்தவாரி முடிந்தபின் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் ரங்கநாதர் கோயில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை வளையல் மாலை மஞ்சள் பழம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை வடக்கு வாசல் வழியாக அலங்கார பந்தலுக்கு எடுத்து வந்தனர் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் சீர்வரிசை பொருட்கள் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டது சீர்வரிசை பொருட்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்