உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி திரி மற்றும் எண்ணெய் நிரப்பும் பணி | Trichy | Thayumana Swami Temple

கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி திரி மற்றும் எண்ணெய் நிரப்பும் பணி | Trichy | Thayumana Swami Temple

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பு 40 அடி உயர கோபுரத்தில் ஏற்றப்படும். மலைக்கோட்டை தாயுமான சுவாமி சன்னதியில் மெகா சைஸ் திரி தயாரிக்கும் பணி கடந்த 3ம் தேதி தொடங்கியது. பணிகள் முடிந்து ராட்சத திரியை கோயில் பணியாளர்கள் மற்றும் அடியார்கள் பல்லக்கில் சுமந்து அரோகரா என பக்தி முழக்கத்துடன் மேலே ஏற்றினர். பின்னர் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில் 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, நெய் ஆகியவைகளை கொண்டு ஊற வைக்கும் பணியில் ஈடுபட்டனர். வருகிற 13 ம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை