ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் | Trichy | Tirupparankundram Issue
ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் | Trichy | Tirupparankundram Issue | Call to light 1 lakh lamps : Sri Sadagopa Ramanuja Jeeyar ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வீடியோ வெளியிட்டு பேசியுள்ளதாவது, முருக பக்தர்கள் பேரவை சார்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனை வலியுறுத்தி வரும் 23 ம்தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள தெருக்களில் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றவும், இந்து மக்களை ஒன்று திரட்டி கந்த சஷ்டி பாராயணமும் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழ்க்கடவுள் முருகனை எண்ணி இந்துக்கள் ஒன்று சேர்ந்து வீடுகளில் தீபம் ஏற்றவும், கந்த சஷ்டி பாராயணம் பாட வேண்டும் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். வீடியோ பேச்சு: ஜீயர் சடகோப ராமானுஜர் 00:30 - 02:30