/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ முதல் பிரதியை பெற்று கொண்டார் அமுதசுரபி ஆசிரியர் | Nethaji The Great | Book Release
முதல் பிரதியை பெற்று கொண்டார் அமுதசுரபி ஆசிரியர் | Nethaji The Great | Book Release
நேதாஜி தி கிரேட் புத்தக வெளியீடு மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா மேற்கு மாம்பலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தினமலர் இணை இயக்குனரும், தாமரை பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனருமான ரா.லட்சுமிபதி தலைமை தாங்கினார். ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர் பாணிகிரஹா ஸ்ரீதர், துணை தலைவர் கோடை வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். செயல் திட்ட அதிகாரி தீபா லெனின் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் கார்த்தி குமார் அறிமுக உரை வழங்கினார். முதல் பிரதியை அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பெற்று கொண்டார்.
ஜூலை 20, 2024