பாக் அணு ஆயுத கிடங்கில் இந்தியா குண்டு போட்ட பகீர் india vs pakistan | kirana hills nuclear storage
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே வெடித்த போர், மொத்த உலகத்தையும் பதைபதைக்க வைத்தது. பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலை, நடுவானிலேயே இந்தியா தூள் தூளாக்கியது. அதே நேரம் இந்தியாவின் ஏவுகணை அட்டாக் பாகிஸ்தானை அலற விட்டது. அதன் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்களை குண்டு வீசி இந்தியா நொறுக்கியது. நம் அடியை தாங்க முடியாத பாகிஸ்தான், பொரை நிறுத்தும் படி கெஞ்சியது. இதனால் 4 நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானுக்கு தான் பலத்த அடி என்பதை சர்வதேச புலனாய்வு நிபுணர்கள் எல்லோருமே சொல்லி விட்டனர். இருப்பினும் ஒரே ஒரு மர்மத்துக்கு மட்டும் இதுவரை விடை கிடைக்காமல் இருந்தது. அதாவது, பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் கிரானா மலையில் இந்தியா குண்டு வீசியதா இல்லை என்பது தான். ‛கிரானா மலையை இந்தியா பதம் பார்த்தது. இதற்கு பயந்து தான் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி கெஞ்சியது என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால் அதை இந்தியா மேலோட்டமாக மறுத்தது. ‛கிரானா மலையில் எதுவும் இருந்துவிட்டு போகட்டும்; ஆனால் நாம் அங்கு தாக்குதல் நடத்தவில்லை என்று இந்தியாவின் ஏர் மார்ஷல் நக்கலாக சிரித்தபடி சொன்னார். இதனால் குழப்பம் நீடித்தது. இப்போது, போர் முடிவுக்கு வந்து 70 நாட்கள் ஆன நிலையில், உண்மை உடைந்து இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் இருக்கும் மலையை இந்தியா குண்டு வீசி பதம் பார்த்து இருக்கிறது. இது தொடர்பான ஆதாரமும் வெளியாகி உள்ளது. கிரானா ஹில்சில் பாகிஸ்தான் என்னென்ன செய்கிறது? இந்தியா எப்படி அந்த இடத்தை துல்லியமாக அடித்தது? இவ்வளவு நாள் கழித்து உண்மை வெளியே வந்தது எப்படி? என்பதை பார்க்கலாம்.