உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / 3 முறை வட்டமிட்ட கருடன் ! திவ்ய தேசத்து நரசிம்மர் காஞ்சி வந்த வரலாறு

3 முறை வட்டமிட்ட கருடன் ! திவ்ய தேசத்து நரசிம்மர் காஞ்சி வந்த வரலாறு

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் 900 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நள வெண்பாவை எழுதிய புலவர் புகழேந்தி புலவர் பிறந்த ஊர் இது தான். 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் இந்த கிராமத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திரு கடல் மல்லை திவ்ய தேசங்களில் இருந்த பல சிலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நரசிம்மர் சிலையை மட்டும் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளனர். லட்சுமி நரசிம்ம உற்சவ சிலை நிறுவப்படும் இடத்தை அடையாளம் காண கருடனுக்கு உத்தரவிடப்பட்டது. கருடன் இந்த கோயில் விமானத்தை மூன்று முறை சுற்றி வந்தார். அதன் பிறகே இங்கு லட்சுமி நரசிம்மர் சிலை கொண்டு வரப்பட்டது. இது திவ்ய தேசமாக இல்லை என்றாலும், திரு கடல் மல்லை திவ்ய தேசம் தொடர்பான உற்சவ சிலை இங்கு நிறுவப்பட்டதால் தனி சிறப்பு பெற்று இருக்கிறது. திருமண தோஷம், உடல்நலம் தொடர்பான பிரச்னைகளை நரசிம்மர் போக்குகிறார். லட்சுமி நரசிம்மருக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும். தாயார் அஹோபில உடன் அருள் பாலிக்கிறார். நரசிம்மர் கோயிலில் அழகான தோட்டமும் அமைந்துள்ளது. பங்குனி பிரம்மோற்சவம், சுதர்சன ஹோமம், தவண உற்சவம் நடப்பது சிறப்பு

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை