உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரம் மேயர் மீது கலெக்டரிடம் புகார் DMK Mayor

காஞ்சிபுரம் மேயர் மீது கலெக்டரிடம் புகார் DMK Mayor

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32ல் திமுக கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவுக்கு 9 பேர் உள்ளனர். திமுகவை சேர்ந்த மேயர் மகாலட்சுமி மீது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அதிருப்தியில் உள்ளனர். கவுன்சிலர்களை மதிப்பது இல்லை; வார்டுகளுக்கு தேவையான நிதி ஒதுக்குவதில்லை; வளர்ச்சி பணிகளில் சுணக்கம்; மேயர் மகாலட்சியின் கணவர் யுவராஜின் தலையீடு என கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர். மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, திமுக கவுன்சிலர்கள் கடந்த மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். அவர்களை அமைச்சர் நேரு சமாதானப்படுத்த முயன்றார். எனினும் பிரச்னை தொடர்கிறது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை