உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவியிடம் அத்து மீறியவர் சிறையில் அடைப்பு

மாணவியிடம் அத்து மீறியவர் சிறையில் அடைப்பு

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் சுதாகர். தமிழக வெற்றி கழகத்தில் கடத்தூர் நகர செயலாளராக இருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளஸ் 1 மாணவி வீட்டில் தனியாக தூங்கி இருக்கிறார். அவரது பாட்டி திண்ணையில் தூங்கிகொண்டு இருந்தார். வீட்டின் கதவு தாழிடப்படவில்லை. இரவில் மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த சுகாகர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கத்தி கூச்சலிட்ட பெண், உடனடியாக 1098 என்ற சைல்டுலைன் எண்ணுக்கு Childline தொடர்புகொண்டு புகார் அளித்தார். மகளிர் காவல் நிலைய போலீசார் வந்து விசாரித்தனர். மாணவியிடம் தவெக நிர்வாகி சுதாகர் அத்துமீற முயன்றது தெரிந்தது. சுதாகர் கைது செய்யப்பட்டார். போக்சோ பிரிவில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 தினங்களுக்கு முன் நடந்த தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி கெட் அவுட் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், அக்கட்சி நிர்வாகியே போக்சோவில் கைது ஆகி இருக்கிறார்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி