/ தினமலர் டிவி
/ பொது
/ மனைவியை தீர்த்து கட்டி கணவன் போட்ட டிராமா 3rd wife dies crime Husband arrested thenkasi police crim
மனைவியை தீர்த்து கட்டி கணவன் போட்ட டிராமா 3rd wife dies crime Husband arrested thenkasi police crim
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் திருமலைச்சாமி(42). இவரது மனைவி சசிகலா (34). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமலைச்சாமிக்கு சசிகலா, 3வது மனைவி ஆவார். முதல் மனைவி இறந்ததால் 2வது திருமணம் செய்தார். 2வது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் சசிகலாவை சில ஆண்டுகளுக்கு முன் 3வதாக திருமணம் செய்தார். திருமலைசாமி 4வதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு அதுபற்றி கேட்டு சசிகலா சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த திருமலைச்சாமி மனைவி முகத்தில் மனைக்கட்டையால் அடித்தார்.
நவ 02, 2024