உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காப்பாற்ற எவ்வளவோ போராடினோம்: டீன் 4Yrs Old Boy | Tirunelveli Govt Hospital

காப்பாற்ற எவ்வளவோ போராடினோம்: டீன் 4Yrs Old Boy | Tirunelveli Govt Hospital

ஊசி போட்டு கொன்னுட்டாங்க கதறிய சிறுவனின் குடும்பம்! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள மலைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பொன் மாறன் வயது 4. தாய் இறந்து விட்டார். சிறுவன் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். சிறுவன் பொன்மாறனுக்கு கழுத்தில் சிறியநெறி கட்டி இருந்தது. ஆபரேஷன் செய்து அகற்றுவதற்காக, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 10ம் தேதி அட்மிட் செய்தனர். மருத்துவமனையில் கேன்சருக்கான ஸ்கேன் செய்ய அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் இல்லை. கான்ட்ராஸ்ட் சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சிறுவனுக்கு ஐவி கான்ட்ராஸ்ட் மருந்தை லேப் டெக்னீசியன் ஊசி மூலம் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துள்ளான். தவறான ஊசியை செலுத்தியதால் சிறுவன் இறந்து விட்டதாக கூறி, உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா செய்தனர். சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி