உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்லூரி மாணவர்கள் டார்க்கெட்; சென்னையில் சிக்கிய கஞ்சா கும்பல் | 5 Auto Drivers Arrest | Ganja Sales

கல்லூரி மாணவர்கள் டார்க்கெட்; சென்னையில் சிக்கிய கஞ்சா கும்பல் | 5 Auto Drivers Arrest | Ganja Sales

சென்னை, பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஆட்டோக்களில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் வாகன சோதனையின்போது, ஆட்டோவில் வந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் இருந்தன. 3 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரைகள், 5 போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவில் இருந்த இளைஞர்கள் மனோஜ்குமார், ராஜ்குமார், விக்னேஷ், பிரதீப், அரிதர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்வதும், இரவு நேரங்களில் ஆட்டோவில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது. கல்லூரி மாணவர்கள் தான் இவர்களின் டார்கெட்டாக இருந்துள்ளது. மும்பைக்கு சென்று போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்று வந்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை