புதுச்சேரி சிறுமி வழக்கில் கைதானவர் கதை சிறையில் முடிந்தது! 9 Year Old Girl Child | Murder Case
கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில், 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி உடலை சாக்கு பையில் போட்டு, கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நைசாக பேசி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த விவேகானந்தன், இன்று காலை கழிவறையில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட சிறைக் காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர், சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.