விக்சித் பாரத் இலக்கை அடைய வழிகாட்டும் கருத்தரங்கு
நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம் என்ற முனைப்புடன் பிரதமர் மோடி அரசு தொலைநோக்கு திட்டங்களை வகுத்து வருகிறது. இதுகுறித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்தி, செயல்வடிவத்தை கொண்டு சேர்க்கும் விதமாக, வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு, விழித்திடு, எழுந்திடு, உறுதியாக இரு என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கொடிசியா E- ஹாலில் நவம்பர் 30, டிசம்பர் 1ஆகிய 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெறும். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், 27க்கு மேற்பட்ட பல்துறை வல்லுனர்கள் கருத்துக்களை பரிமாற உள்ளனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாஜ மூத்த தலைவர் எச். ராஜா, மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி., அலெக்சாண்டர் ஜேக்கப், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.