கெஜ்ரிவாலை தேச விரோதி என விமர்சித்ததால் சர்ச்சை! INDI Allaiance Breaking | Kejriwal | AAP | Congres
டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒவ்வொரு நாளும் புதிய புதிய வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து மத்திய பாஜ அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார். இந்த நிலையில், தொடர்ந்து போலி வாக்குறுதிகளை அளித்து டில்லி மக்களை ஏமாற்றி வரும் ஆம் ஆத்மி அரசு, மீண்டும் ஆட்சியை பிடிக்க தொடர்ந்து பொய் பேசுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன் கூறினார். டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், ஜன் லோக்பால் அமைக்கப்படும் எனக் கூறியவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதை ஏன் நிறைவேற்றவில்லை. பஞ்சாப் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சி தான் நடக்கிறது. அங்கு ஏன் ஜன் லோக்பால் கொண்டு வரவில்லை எனவும் மேக்கன் கேள்வி எழுப்பினார்.