/ தினமலர் டிவி
/ பொது
/ ஆரப்பாக்கம் சம்பவம் வடமாநில லாரிகளை நிறுத்தி போலீசார் சல்லடை | Aarapakkam | Police Investigation | T
ஆரப்பாக்கம் சம்பவம் வடமாநில லாரிகளை நிறுத்தி போலீசார் சல்லடை | Aarapakkam | Police Investigation | T
திருவள்ளூர் ஆரப்பாக்கத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சென்ற 12ம் தேதி மர்ம நபரால் வாயை பொத்தி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். போலீசார் சல்லடை போட்டு தேடி போட்டோ மற்றும் வீடியோக்களில் குற்றவாளியை அடையாளம் கண்டனர். தெளிவான காட்சிகள் கிடைக்காததால் அவனை சரியாக அடையாளம் காண முடியவில்லை. அவன் ரயிலில் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி சென்றதும் தெரிந்தது. ஓரளவு அடையாளங்கள் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து வடமாநிலத்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஜூலை 23, 2025