உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர் | Abu Dhabi Airport | African king | King Mswati | Esw

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர் | Abu Dhabi Airport | African king | King Mswati | Esw

அபுதாபி ஏர்போர்ட்டுக்கு நேற்று ஒரு தனி விமானம் வந்தது. அதில் இருந்து அரைகுறை ஆடையுடன் ஒருவர், பல பெண்களுடன் இறங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் மரியாதையாக வீர வணக்கம் செலுத்தும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் காணப்பட்டார். அவரது வருகையால் ஏர்போர்ட்டின் மூன்று முனையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நபர் வேறு யாருமல்ல, தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி தான். ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கும் இவர், 1986 முதல் எஸ்வாட்டினியை ஆண்டு வருகிறார். 57 வயதாகும் மன்னர் மஸ்வாட்டி, அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையில் தோன்ற, அவரது 15 மனைவியர், 30 குழந்தைகள் ஆப்ரிக்க உடைகளில் அழகாக காணப்பட்டனர். பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடத்த ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இவரது தந்தை முன்னாள் ஸ்வாசிலாந்து மன்னர், 125 மனைவியர், 210 குழந்தைகள் 1,000 பேரக்குழந்தைகளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மஸ்வாட்டிக்கு 30 மனைவியர் உள்ளனர். ஆனால் இந்த பயணத்தில், 15 மனைவியர் மட்டுமே உடன் வந்தனர். 35க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ரீட் டான்ஸ் எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுக்கும் பழக்கம் உலகளவில் விமர்சனத்தையும் பெற்று உள்ளது. மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர எஸ்வாட்டினியில் 60 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில் மன்னர் மஸ்வாட்டி உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். #AbuDhabiAirport | #Africanking | #KingMswati | #Eswatini

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை