உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்

நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்

ஊட்டுக்குளங்கரா பகவதி கோயில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருவெம்பா கிராமத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலவர் பகவதி அம்மன். இங்கு கணபதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களும் துணை தெய்வங்களாக அருள் பாலிக்கின்றார்கள். ஊட்டுக்குளங்கர பகவதி கோயில் நடிகர் அஜித் குமார் குடும்பக் கோயில். இக்கோயிலுக்கு அஜித், மனைவி ஷாலினி மகன், ஆத்விக், மகள் அனோஷ்கா ஆகியோருடன் அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தக்கோயிலுக்கு மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் அஜித் நேற்று வந்தார். பாரம்பரிய பட்டு வேஷ்டி அணிந்தும், மேலாடை இன்றி பட்டுத்துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு மனைவி, மகனுடன் பயபக்தியுடன் அஜித் தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் இருந்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் பிரசாதம், சந்தனம், குங்குமம், வாழைப்பழம், சாமி கயிறு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். அவற்றை அஜித், ஷாலினி மெய்சிலிர்க்க வாங்கிக் கொண்டனர். கோயிலில் அஜித், ஷாலினி, ஆத்விக்குடன் இருக்கும் ஃபோட்டோவை ஷாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த போட்டோக்கள் ‛தல ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த போட்டோவில் ஒரு விசேஷம் இருக்கிறது. அஜித் தனது குடும்ப தெய்வமான பகதவி அம்மனை தனது வலது மார்பில் பச்சை குத்தியிருந்தது தான் அந்த விசேஷம். வலது மார்பில் பெரிய அளவில் பகவதி பச்சை குத்தியிருந்தார் அஜித். பகவதி அம்மனை நெஞ்சில் பச்சை குத்திய அஜித் போட்டோவை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்தனர். தல குடும்ப தெய்வம் தான் இனி எங்களுக்கும் குடும்ப தெய்வம் என ரசிகர்கள் சிலர் தீர்க்கமாக முடிவெடுத்தனர். தீவிர ரசிகர்கள் ஊட்டுக்குளங்கரா பகவதி கோயிலுக்கு படையெடுத்தனர். அங்கு அஜீத் மற்றும் அவரது குடும்பத்தினர் சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூடி வாழ வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்தனர். ஊட்டுக்குளங்கர பகவதி அம்மனை நெஞ்சில் தாங்கிய அஜித் போட்டோ வெளியானதை அடுத்து கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும் என்பதை சொல்லால் சொல்லாமல் நெஞ்சில் பச்சை குத்தி நிரூபித்த அஜித் பக்தியை நினைத்து பக்தர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மெய்சிலித்தனர். #Ootukulankara #BhagavathyAmman #TempleDarshan #Palakkad #Keral #ActorAjithkumarDarshan #ActorAjithBhagavathyTattooed #ootukulangara #bhagavathi #temple #spiritualjourney #india #sacredsite #devotion #culturalheritage #pilgrimage #exploreindia #hinduism #templetour #religioussite #divinespirit #ancienttradition #templemagic #sacredjourneys #clientspotlights #peacefulplaces

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை