/ தினமலர் டிவி
/ பொது
/ 8 ஆண்டுகள் நடந்த பாலியல் வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பு | Actor Dileep | Kerala actress
8 ஆண்டுகள் நடந்த பாலியல் வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பு | Actor Dileep | Kerala actress
கேரளா கொச்சியில் 2017ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். வழக்கை விசாரித்த போலீசார் பல்சர் சுனில் என்ற நபர் உட்பட 7 பேரை கைது செய்தனர். பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. குற்றப்பத்திரிகையில் திலீப் 8வது குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். திலீப் தான் இந்த வன்கொடுமையை திட்டமிட்டே நடத்தியதாகக் கூறப்பட்டது. அவருக்கும் அந்த நடிகைக்கும் முன்கூட்டியே பகை இருந்துள்ளது.
டிச 08, 2025