நடிகர் மனோஜ் வீட்டில் திரண்ட திரையுலகினர் actor manaj| barathi raja|
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் சேத்துபட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மனோஜின் உடல் சேத்துபட்டில் இருந்து, நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் இரங்கல் செய்தியில், மனோஜ் காலமான செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். மகனை இழந்து துயரில் வாடும் பாரதிராஜா, துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுகிறேன். அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இரங்கல் செய்தியில், மனோஜ் மறைவு செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தை கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.