உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொய் பாலியல் புகாரால் வேதனை: உண்மை நிச்சயம் ஜெயிக்கும் Actor Jeyasurya | Malayalam Cinima | FIRs |

பொய் பாலியல் புகாரால் வேதனை: உண்மை நிச்சயம் ஜெயிக்கும் Actor Jeyasurya | Malayalam Cinima | FIRs |

கேரள சினிமா துறையில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை மலையாள திரையுலகத்தையே புரட்டி போட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நடிகைகள், சினிமாவின் பிற துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கான பாதிப்புகள் குறித்தும், சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். மலையாள நடிகை மினு முனீர் கூறிய புகார் அடிப்படையில் நடிகர் ஜெயசூர்யாவுக்கு எதிராக கேரள போலீசார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் குறித்து இப்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் ஜெயசூர்யா முதல் முறையாக மவுனம் கலைத்து விளக்கம் அளித்துள்ளார். ஆகஸ்ட் 31 அவரது பிறந்தநாளன்று வெளியிட்ட அறிக்கையில் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி