ஆப்கன் படை தாக்குதலில் சரியும் பாக் ராணுவ வீரர்கள் | Afghanistan-Pakistan conflict | Durand Line
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான எல்லை பகுதி துரந் லைன் (Durand Line). 2,640 கி.மீ. நீளமுள்ள எல்லையை ஆரம்பத்தில் இருந்தே ஆப்கன் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பஷ்தூன் (Pashtun) என்கிற இன மக்களை எல்லை அருகே பிரித்து வைக்கிறது. இதனால் பஷ்தூனிஸ்தான் நாடு வேண்டும் பிரிவினை கோரிக்கை எழுந்தது. இதனை முன்னிறுத்தி அடிக்கடி ஆப்கன்-பாகிஸ்தான் இடையே மோதல் நடக்கும். 2007ல் உருவான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு ஆப்கனில் இருந்து பாகிஸ்தானை நோக்கி கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு இந்த தாக்குதல் பல மடங்கு அதிகரித்தது. தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் தான் உதவுகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அமைப்பின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.