மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ₹1 கோடி இழப்பீடு | Agni Vir Scheme| Deceased | Military youth
2022ம் ஆண்டு அக்னிவீர் என்ற புதிய திட்டத்தை ராணுவத்தில் மத்தியஅரசு அறிமுகப்படுத்தியது. இத்த்திட்டத்தின் கீழ், ராணுவத்தில் 4 ஆண்டு வரை இளைஞர்கள் பணியாற்ற முடியும். இதனால் அதிகம் பேருக்கு ராணுவ வேலைவாய்ப்பு கிடைக்கும். வீரர்கள் இறந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு தரப்படும் என மத்திய அரசு அறிவித்தது. நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அதே சமயம் தொடக்கத்தில் இருந்தே இந்த திட்டத்துக்கு எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அக்னிவீர் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.