வீடு ஃபுல்லா தங்க கட்டிகள்: ரெய்டுக்கு போன அதிகாரிகள் ஷாக் Ahmedabad |massive-gold bust | gold bar
ஆமதாபாத்தில் பால்டி என்ற Paldi இடத்தில் ஒரு அபார்ட்மென்ட் உள்ளது. அதில் ஒரு வீடு தொடர்ந்து பூட்டி இருப்பதாகவும் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் அங்கு நடப்பதாகவும் குஜராத் உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் குஜராத் தீவிரவாத ஒழிப்பு பிரிவு போலீசார் ATS or Anti-Terrorism Squad அங்கு சென்றனர். விசாரணையில் மேககுமார் ஷா என்ற பங்கு சந்தை வியாபாரி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளது தெரியவந்தது. அதே அபார்ட்மென்ட்டின் 4வது மாடியில் மேககுமார் ஷாவின் உறவினர் வசிக்கிறார். அவரிடம் மேககுமார் ஷா வீட்டு சாவி இருந்தது. அதை வாங்கி வந்து வீட்டை திறந்து பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 11 உயர் ரக கடிகாரங்கள் மற்றும் ரூ.1.37 கோடி ரொக்கம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், மேககுமார் ஷா அவருடைய தந்தை மகேந்திர ஷாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இருவரும் துபாயில் வசிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம். மேககுமார் ஷா மற்றும் மகேந்திர ஷா ஆகியோர் போலி நிறுவனங்கள் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்திருக்கலாம் என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மேககுமார் ஷா வீட்டின் சாவியை வைத்திருந்த அவரது உறவினர்களிடமும் விசாரணை நடக்கிறது. பூட்டிய வீட்டில் 108 கிலோ தங்கம் சிக்கியிருப்பது குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.