உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விபத்துக்கு முன் பைலட் கடைசியாக சொன்ன வார்த்தை | Air India AI171 crash | Mayday

விபத்துக்கு முன் பைலட் கடைசியாக சொன்ன வார்த்தை | Air India AI171 crash | Mayday

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் ஜூன் 14 நிலவரப்படி 270 பேர் இறந்துள்ளனர். இன்னும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுகள் நடக்கிறது. 650 அடி உயரத்துக்கு மேலே எழும்பிய விமானம் திடீரென கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன், விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர உதவி கேட்டு பைலட் சுமீத் சபர்வால் தகவல் அனுப்பி உள்ளார். விபத்துக்கு முன் அவர் கூறிய ஆடியோ மெசேஜ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. MAY DAY...MAY DAY...MAY DAY... என மூன்று முறை சொல்லிவிட்டு NO POWER...NO THRUST...GOING DOWN...என என கூறியுள்ளார். அதாவது மே டே என்றால் விமானம் உச்ச கட்ட ஆபத்தில் இருக்கிறது என்பதை குறிக்கும் சங்கேத வார்தை ஆகும். இதனை ஒரு பைலட் மூன்று முறை சொல்கிறார் என்றால் பேராபாத்தில் விமானம் சிக்கிவிட்டது என்று அர்த்தம். அடுத்து நோ பவர், நோ திரஸ்ட், கீழே போகிறோம் என்கிறார். இதோடு தொடர்பு துண்டிக்கிறது. அடுத்த சில நொடிகளில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறுகிறது.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை