உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆப்கனில் பாக் திடீர் தாக்குதல் 21 பேர் மரணம்: எல்லையில் பதற்றம் Pakistan |Afghanistan

ஆப்கனில் பாக் திடீர் தாக்குதல் 21 பேர் மரணம்: எல்லையில் பதற்றம் Pakistan |Afghanistan

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகள். ஆப்கானிஸ்தானில் மண்ணில் செயல்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தானில் அவ்வப்போது குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் மசூதியில் ஐஎஸ் பயஙகரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் 32 பேர் இறந்தனர். 169 பேர் காயமடைந்தனர். இதனால், ஆப்கனில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டி எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மீது வான்வாழி தாக்குதல்களை நடத்த நாங்கள் தயங்க மாட்டோம் என 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானிலுள்ள நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. |#Pakistan |#Afghanistan |#PakistanAirstrike |#TehrikETaliban |#BorderTension |#Nangarhar |#AirStrike |#SouthAsia

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை