உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித்குமார் துயரத்துக்கு மறுநாள் என்ன நடந்தது? வெளியான காட்சி | Ajith kumar Case | Police Compromise

அஜித்குமார் துயரத்துக்கு மறுநாள் என்ன நடந்தது? வெளியான காட்சி | Ajith kumar Case | Police Compromise

சிவகங்கை, மடப்புரம் கோயில் செக்யூரிட்டி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் 28ல் மடப்புரம் கோயிலுக்கு வந்த திருமங்கலம் பேராசிரியை நிகிதா, தன் நகைகள் திருடு போனதாக அளித்த புகாரில் அப்போது அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில் அவர் இறந்த நிலையில், மறுநாள் ஜூன் 29ம் தேதி உடலை வாங்க மறுத்து, மடப்புரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசியல் கட்சியினர், போலீசார், அஜித்குமார் உறவினர்களுடன் திருமண மஹாலின் கதவுகளை மூடி விட்டு பேச்சு நடத்தினர். அதை அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியாக, தங்கள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது. இளைஞர்கள் வீடியோ எடுப்பதை பார்த்த, பழையனுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் ஜன்னல் கதவை மூடினார். போலீஸ் பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்த ஊர்மக்கள் திருமண மஹால் ஜன்னல் கதவை உடைத்ததுடன் சமாதான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சி.பி.ஐ., விசாரணை தொடங்கிய நிலையில், சமாதான பேச்சில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வீடியோ கசிய விடப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைதான போலீசாரின் காவலை, ஜூலை 30 வரை நீட்டித்து நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ