/ தினமலர் டிவி
/ பொது
/ 2026ல் நக்சல் இல்லா பாரதம்: அமித் ஷா மீண்டும் சூளுரை Amit Shah Speech at Lucknow | Yogi Adityanath
2026ல் நக்சல் இல்லா பாரதம்: அமித் ஷா மீண்டும் சூளுரை Amit Shah Speech at Lucknow | Yogi Adityanath
உத்தர பிரதேசத்தில் போலீஸ் பயிற்சி முடித்த 60 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி லக்னோவில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்தது. குண்டர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட அஞ்சினர். நிலம் அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் அதிகம் நடந்தன.
ஜூன் 15, 2025